top of page

Clubs



வீரமாமுனிவர் தமிழ் இலக்கியக்கழகம்
மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை வெளிக் கொணர இம்மன்றம் துணை செய்கிறது. கலை வாரவிழா மூலம் திறமையாளர்களைக் கண்டறிந்து மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. இதில் அனைத்து மாணவர்களும் பங்கேற்றுப் பயன்பெறலாம்.
பொறுப்பாசிரியர்:
திருமதி. மெர்சி A.

ஷேக்ஸ்பியர் ஆங்கிலக் கழகம்
ஆங்கிலத்தில் சரளமாக பேச வாசிக்க, எழுத, கவனிக்க, சரியான முறையில் சிந்திக்க தகவல் தொடர்புத்திறன் மற்றும் ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்த ஆர்வமுள்ள மாணவர்கள் இதில் இணைந்து பயிற்சி பெறலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி.அமலி K., திருமதி. செல்வி S.

இராமானுஜன் கணித மன்றம்
போட்டி நிறைந்த உலகில் நம்மை தயார் செய்து வெற்றி பெற வைப்பதில் இராமானுஜன் கணித மன்றம் பேருதவியாக இருக்கின்றது. இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல், வானவியல் போன்ற துறைகளில் முக்கியக் கருவியாக செயல்படுவது கணிதமே. விருப்பமுள்ள மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
-திருமதி. அந்தோணி அனுசுயா T., சகோ. சாலமோன் ராஜா A.

Dr. A.P.J அப்துல் கலாம் அறிவியல் மன்றம்
மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தி எதையும் ஆய்ந்தறியும் சிந்தனையை உருவாக்குவதே இக்கழகத்தின் நோக்கமாகும். அனைத்து மாணவர்களும் இக்கழகத்தில் இணைந்து பணியாற்றலாம், பயன் பெறலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
சகோ. ஞானசேகர் C திருமதி. மகாதேவி S
வரலாறு மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்றம்
மாணவர்களிடம் வரலாற்று அறிவை வளர்ப்பதற்காகவும், தமிழகத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளவும் கலை, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்தவும் இம்மன்றம் உருவாக்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இதில் பங்கேற்கலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி. ஜோஸ்பின் அகிலா P., திருமதி. பாத்திமா ஜெயா ஜான்சி E.
நாட்டு நலப்பணித்திட்டம் (NSS)
சமூகத்திற்குத் தொண்டு செய்வதே உண்மையான மனித வாழ்வு என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு “எங்களுக்காக அல்ல, உங்களுக்காக” (Not me, But you) என்ற விருதுவாக்குடன் செயல்படும் இத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து சேவையாற்றலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திரு. ஆனந்த் K, திரு. ஜோசப் சார்லஸ் A


இளம் செஞ்சிலுவைச் சங்கம் (JRC)
"சுகாதாரம், சேவை, நட்பு" ஆகியவற்றை உயரிய குறிக்கோள்களாகக் கொண்டு மாணவர்களிடம் தொண்டு செய்யத் தூண்டும் அமைப்பாக இச்சங்கம் செயல்படுகிறது. இதில் 7,8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து சேவை செய்யும் பண்பை வளர்த்துக் கொள்ளலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திரு ஸ்டீபன் S , திரு. ஆந்தோணி ஆரோக்கிய ராஜா S

சாரணர் இயக்கம் (Scouts & Guides)
சாரணர் இயக்கத்தின் குறிக்கோள் "எப்பொழுதும் தயாராக இரு" என்பதாகும். சாரணர் உடலாலும் உள்ளத்தாலும் பணி செய்ய எந்த நேரத்திலும் தயாராக இருக்க இவ்வியக்கம் பயிற்சி அளிக்கிறது. 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திரு. முத்து எடிசன் P, திருமதி. விஜிலியா G

தேசிய பசுமைப்படை (NGC)
நம்பள்ளி மாணவர்கள் மூலம் மரங்களை நடுவதும் மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பதும் தேசிய பசுமைப்படையின் நோக்கமாகும். பல்லுயிர் பாதுகாப்பு, நீர்பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நெகிழி விழிப்புணர்வு மற்றும் மறுசுழற்சி, ஆற்றல் பாதுகாப்பு நில பயன்பாட்டு திட்டமிடல் மற்றும் வள மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அனைத்து வகுப்பு மாணவர்களும் இதில் கலந்து கொண்டு பணி
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி. பீனா ஸ்டார் லெட் I, திருமதி. ஜெயா P.
இளம் கிறிஸ்தவர் மாணாக்கர் இயக்கம்
"புதிய சமுதாயம் படைக்க” என்ற குறிக்கோளோடு செயல்படும் இயக்கமாகும். ஆளுமை திறன்களை வளர்க்கவும், தன்நம்பிக்கையில் வளரவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையவும் இவ்வியக்கம் உதவி செய்கின்றது.
பொறுப்பாசிரியர்கள்:
திரு. அருள்ராஜ் V., திருமதி. ஞானம்மாள் B.

செஞ்சுருள் இயக்கம் (RRC)
பாலியல் கல்வி பற்றிய அறிவினை இளைஞர்களாக வளர்ந்து வரும் மாணவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் இவ்வியக்கம் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றது. இதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பங்கு கொண்டு பயன்பெறலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி. சிந்தா J.B., திரு. புஸ்பராஜ் A.

மனித உரிமைகள் கழகம்
மாணவர்களிடையே மனித உரிமைக் கல்வி பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கவும், மனித உரிமைக் கல்வியைப் பிறரிடம் வலியுறுத்தவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி. பாத்திமா ஜெயா ஜான்சி E, திரு. ஜார்ஜ் வின்சென்ட் S.



அமைதிக் கழகம்
சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு கிடைக்கும் வழிமுறையை இந்த மன்றம் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது. குழு மோதல்களை தவிர்ப்பது, அனைவரையும் மதிப்பது, விட்டுக் கொடுத்து வாழ்வது போன்ற செயல்பாடுகளை மாணவர்களிடம் ஊக்குவிக்கின்றது. அனைத்து வகுப்பு மாணவர்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி. அமலி K., திரு. ஆனந்த் K.
ஆஞ்சலோ கலை மற்றும் கைவினைக்கழகம்
ஆஞ்சலோ கலை மற்றும் கைவினைக்கழகம் மாணவர்கள் கலைப் பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள இக்கழகம் உதவுகின்றது. மாணவர்களின் அழகியல் மதிப்புகளை வளர்ப்தற்கும் படைப்புத் திறன்கள் மற்றும் கலைத்திறன்களை மேம்படுத்தவும் வழிவகை செய்கின்றது. 6 முதல் 10 வகுப்புகள் வரையிலான மாணவர்கள் இதன் வழி பயற்சி பெறுகின்றனர்.
பொறுப்பாசிரியர்:
திருமதி. புனிதா சார்லெட் T.
கௌசானல் விளையாட்டுக் கழகம்
இக்கழகம் கல்வியோடு கூட உடல்வளமைப்படுத்தவும் மறுபார்வை செய்வதற்கும்,மற்றும் மன நலனை சீர்படுத்துவதற்கும். உதவுகின்றது. அனைவருக்குமான கூட்டு பயிற்சிகளிலும் உடற்பயிற்சியோடு அவரவர் விரும்பும் குழு மற்றும் தனிநபர் விளையாட்டுக்களிலும் தடகள பயிற்சிகளும் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துவதோடு அதற்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது.
பொறுப்பாசிரியர்கள்:
திருமதி.விஜயலீலா K , திரு. ராஜநிலா S.

முன்னாள் மாணவர் மன்றம்
நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள், அறிவு மற்றும் திறமைகளை தற்பொழுது பயிலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் தாங்கள் பயின்ற காலத்தின் நினைவுகளை உறவுகளைப் புதுப்பிக்க துணை நிற்கிறது.
பொறுப்பாசிரியர்கள்:
திரு. ரெக்ஸ் R., திருமதி. சிந்தா J. B.

.jpg)



சாரணர் இயக்கம் (Scout)
சாரணர் இயக்கத்தின் குறிக்கோள் “எப்பொழுதும் தயாராக இரு" என்பதாகும். சாரணர் உடலாலும், உள்ளத்தாலும் பணி செய்ய எந்த நேரத்திலும் தயாராக இருக்க இவ்வியக்கம் பயிற்சி அளிக்கிறது. 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.


இளம் செஞ்சிலுவைச் சங்கம் (JRC)
'சுகாதாரம், சேவை, நட்பு" ஆகியவற்றை உயரிய குறிக்கோள்களாகக் கொண்டு மாணவர்களிடம் தொண்டு செய்யத் தூண்டும் அமைப்பாக இச்சங்கம் செயல்படுகிறது. இதில் 7,8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து சேவை செய்யும் பண்பை வளர்த்துக் கொள்ளலாம்.
bottom of page
